கொல்கத்தா மாநகரில் உள்ள பாலிகன்ஞ் சட்டமன்றத் தொகுதியில் ஐக்கிய முன்னணி சார்பில் இடதுமுன்னணி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பவுத்ஹலீம் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். மேற்குவங்க இடதுமுன்னணி ஆட்சியில் நீண்டகாலம் சட்டமன்ற சபாநாயகராக இருந்தவரும் தலைசிறந்த சட்ட வல்லுநர்களில் ஒருவரான மறைந்த தோழர் ஹாசிம் அப்துல் ஹலீமின் மகன் பவுத்ஹலீம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பிரச்சாரத்தின் முத்தாய்ப்பாக தொகுதி முழுவதும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், முகமது சலீம் ஆகியோர் பங்கேற்ற மாபெரும் பிரச்சாரப் பேரணி நடைபெற்றது.