election2021

img

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களை தடை செய்க.... தலைமைச்செயலாளர்களுக்கு  தேர்தல் ஆணையம் உத்தரவு....

புதுதில்லி:
வெற்றி கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று தலைமைச்செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 2 ஞாயிறன்று  எண்ணப்பட்டன. இதையடுத்து மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் முன்னணியில் உள்ள கட்சிகளின் தொண்டர்கள் தேர்தல் வெற்றியை கொண்டாட பொது இடங்களில் கூடினர்.இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தை உடனடியாக தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் நடைபெறும் மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அவசர கடிதம் அனுப்பியுள்ளது. அதில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்காக கூடுவதை தடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.