சென்னை:
உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளரை விட சுமார் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்ட தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளரை விட சுமார் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இந்தத் தொகுதியில் போட்டியிட்ட பாமகவேட்பாளர் 23,643 வாக்குகள் பெற்றுள்ளார்.உதயநிதி ஸ்டாலின் 91,776 வாக்குகள் பெற்றுஅமோக வெற்றி பெற்றுள்ளார்.தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சா
ரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், தனது தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.