election2021

img

திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற திட்டக்குடி பிரச்சாரக் கூட்டம்....

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 24 புதனன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் திட்டக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கணேசன், நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரன், பண்ருட்டி தொகுதி தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் இரா.வேல்முருகன், விருத்தாசலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோரை ஆதரித்தும்; அதைத் தொடர்ந்து மாலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் க.பொன்முடி, விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் நா.புகழேந்தி, விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன், வானூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வன்னி அரசு ஆகியோரை ஆதரித்தும்; மார்ச் 25 வியாழனன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு, கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி, செங்கம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.கிரி, போலூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.வி.சேகரன், வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளர் அம்பேத்குமார், கலசப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணன், ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், செய்யாறு தொகுதி திமுக வேட்பாளர் ஜோதி ஆகியோரை ஆதரித்தும் பிரச்சாரம் மேற்கொண்டார்.