election2021

img

திமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினின் எழுச்சிமிகு பிரச்சாரம்....

$ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி திமுக வேட்பாளர் செங்குட்டுவன், ஓசூர் திமுக வேட்பாளர் ஒய்.பிரகாஷ், தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன், வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளர் முருகன், பர்கூர் தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன், ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை  ஆதரித்தும்;

$ தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தர்மபுரி தொகுதி திமுக வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் தொகுதி திமுக வேட்பாளர் இன்பசேகரன், பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் டாக்டர் பிரபு ராஜசேகர், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் பி.கே.முருகன், அரூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.குமார் ஆகியோரை ஆதரித்தும்;

சேலம் மாநகரில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரன், சேலம் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன், சேலம் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எஸ்.சரவணன், ஓமலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் ஆகியோரை ஆதரித்தும்;

சேலம் மாவட்டம் ஆத்தூரில் மார்ச் 24 புதனன்று நடைபெற்ற மாபெரும் பிரச்சாரத்தில் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் சின்னதுரை, கங்கவள்ளி தொகுதி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, சங்கராபுரம் திமுக வேட்பாளர் உதயசூரியன், ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளர் மணிக்கண்ணன், கள்ளக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்னம் ஆகியோரை ஆதரித்தும் உரையாற்றினார்.