புதுதில்லி:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி மாலை 6 மணிநிலவரப்படி 155 தொகுதிகளில் முன்னிலைபெற்றது.இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். “ வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்கள் மாற்றத்தைவிரும்பி வாக்களித்துள்ளனர். உங்கள் தலைமையின் கீழ் மக்களின் நம்பிக்கையை நாங்கள் பூர்த்தி செய்வோம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’ எனக் கூறியுள்ளார்.