election2021

img

கேரளத்தில் நாங்கள் அமோக வெற்றிபெறுவோம்.... சாதிக் கட்சிகளின் தயவு இடதுசாரிகளுக்கு அவசியமில்லை....

பாலக்காடு:
கேரளத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில்ஈடுபட்டு வரும் முதல்வர் பினராயி விஜயன், பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள் ளார். 

அப்போது சாதிக்கட்சிகளின் தயவு தங்களுக்கு தேவையில்லை என்று குறிப் பிட்டுள்ளார்.“வரும் தேர்தலில் எல்டிஎப் அதிக இடங்களைப் பெற்று வெற்றி பெறும். இதில் எந்தவிதசந்தேகமும் இல்லை. கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களைப் பெறுவோம். இடதுஜனநாயக முன்னணி அரசு மீது காங்கிரஸூம், பாஜகவும் சேற்றை வாரி பூச முயற்சிசெய்கின்றன. ஆனால் அவர்களது எண் ணம் பலிக்காது. மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு எந்த சாதிக் கட்சியின் அவசியமும் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணிக்கு தேவையில்லை.

இடதுசாரிகளுக்கும், காங்கிரஸூக்கும் இடையே சில அனுசரிப்புகள் இருப்பதாக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் ராஜகோபால் கூறியிருக்கிறார். அது முற்றிலும் தவறு. அவர் வேண்டுமானால் சரிசெய்து கொண்டு அரசியல் நடத்தலாம். எங்களுக்கு அப்படிப் பட்ட அவசியம் எழ வில்லை.பல்வேறு ரயில் திட்டங்களுக்கு இடதுசாரிகள் அரசு அனுமதியைத் தரவில்லை என்று புகழ்பெற்ற மெட்ரோமேன் ஸ்ரீதரன் புகார் கூறியிருக்கிறார். நாட்டின் மிகப்பெரிய தொழில் நுட்ப சரித்திரம் படைத்தவர் ஸ்ரீதரன். அவர் இதுபோன்று பேசக் கூடாது. பாஜகவில் சேருபவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக அந்தக்கட்சியின் நிலைப்பாட்டை பின்பற்றுவார் கள் போலும். இதற்கு ஸ்ரீதரனும் விதிவிலக்கில்லை என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டியது இருக்கிறது, என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.