election2021

img

வெற்றிப் பயணத்தை தொடங்கினார் சிபிஎம் வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய்...

திருப்பரங்குன்றம்:
திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சிகளின் ஆதரவுடன் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் எஸ்.பொன்னுத்தாய் தனது வெற்றிபிரச்சாரப் பயணத்தை  மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேஷன், திமுக தெற்கு மாவட்டஇணைச் செயலாளர் பாலாஜி உள்ளிட்ட தோழமைக்கட்சியினருடன் இணைந்து ஞாயிறன்று மக்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் திகழும் விளாச்சேரியில் தொடங்கினார்.

சனிக்கிழமை திருமங்கலத்தில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் எஸ்.பொன்னுத்தாயைஅறிமுகப்படுத்திப் பேசினார். அப்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் நறுமணத் தொழிற்சாலை தொடங்கப்படும். திருப்பரங்குன்றம் மேம்பாலம் அருகே சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்று அவர் அளித்த பிரதான வாக்குறுதிகளை முன்னிறுத்தி எஸ்.பொன்னுத்தாய் வாக்குசேகரிப்பை தொடங்கினார். விளாச்சேரி கிராமத்தில் சுமார் 1,500 முஸ்லிம் குடும்பங்கள்உள்ளன. இவர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள். இதுவரை நடைபெற்ற 16 தேர்தல்களிலும் விளாச்சேரியில் திமுக தலைமையிலான அணி தான் அதிக வாக்குகளைப் பெற்றது. இது வரலாறு என்றார் விளாச்சேரி மேலத்தெருவைச் சேர்ந்த பால்ராஜ். மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் சொந்த ஊர் விளாச்சேரிதான். இருப்பினும் திமுக அணி தான் இங்கு அதிகவாக்குகளைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலிலும் விளாச்சேரி மக்கள் அதை உறுதி செய்வார்கள் என்றார்.விளாச்சேரியைத் தொடர்ந்து நெசவாளர் காலனியில் வாக்குச் சேகரித்த பொன்னுத்தாய், “நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து செயல்பட சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்.நெசவாளர்கள் குடும்பங்கள் பாதுகாக்கப் படும்’’ என உறுதியளித்தார்.கீழக்குயில்குடியில் வாக்குச்கேரித்த அவர், கிராமத்தின் “குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும், நீர் நிலைகள் தூர்வாரி மேம்படுத்தப்படும்” என உறுதியளித்தார்.

வடிவேல்கரை வாக்காளர்களிடம் பேசிய வேட்பாளர் பொன்னுத்தாய்,”தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடின்றி செலவழிக்கப்படும்” என உத்தரவாதமளித்தார்.மேலக்குயில்குடியில் 100 பெண்கள் திரண்டு வரவேற்பளித்தனர். அவர்களிடம் பேசிய வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய், “ மேலக்குயில்குடிக்கு தனி ரேஷன் கடை கொண்டுவரப்படும். நூறு நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். தினக்கூலி ரூ.450 பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தார்” தொடர்ந்து ஆலம்பட்டியில் வாக்குச்சேகரித்தார். இராஜம்பாடியில் சுமார் 80 பெண்கள் வேட்பாளரை வரவேற்றனர்.  அவர்களிடம் பேசியவேட்பாளர்,“முதியோர் உதவித்தொகை, கணவரை இழந்தவர்களுக்கு உதவித்தொகை பெற்றுத்தரப்படும்” என்றார்.

வாக்குச்சேகரிப்பு தொடக்க நிகழ்வில்,திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கே.ராஜேந்திரன், கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், முத்துராஜ், கார்த்திக், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, எம்.விஜயா, திமுக தெற்கு மாவட்டத் துணைச் செயலாளர் பாலாஜி, ஒன்றியச்செயலாளர் பெரியசாமி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட தோழமைக்கட்சிகளின் நிர்வாகிகள், தலைவர்கள் கலந்துகொண்டனர்.வாக்குச்சேகரிப்பில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் செல்வசிங், மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.