திருவனந்தபுரம்
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் பதிவான வாக்குகளில் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து காலை 8:40 மணி அளவில் முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்று முடிவிலிருந்து தற்போதைய மூன்றாம் சுற்று முடிவு வரை (12 மணி நிலவரம்) ஆளும் இடதுசாரி கூட்டணி 94 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களிலும், பாஜக கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. கேரளத்தில் ஆட்சி அமைக்க பெருமான்மை 71 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆளும் இடதுசாரி கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையானதை விட 23 இடங்களில் கூடுதலாக முன்னிலையில் இருப்பதால் கேரளாவில் இரண்டாவது முறையாகத் தொடர்ந்து இடதுசாரிகள் ஆட்சி அமைக்கிறது.
இதன்மூலம் முதல்வர் பினராயி விஜயன் புதிய வரலாறு படைத்து ஆட்சியமைக்க உள்ளார்.