மொரிஷியஸில் நடந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சியான பார்டி டிராவைலிஸ்ட் மற்றும் நோவியாவ் ஜனநாயகத்தினர் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு தேசமான மொரிஷுயஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் 62 பேர் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த 2 முறை நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பிரவீந்த் குமார் ஜூக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூகவுடமை இயக்கம் இம்முறை பெரும்பான்மை இடங்களில் தோல்வியடைந்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சியான பார்டி டிராவைலிஸ்ட் மற்றும் நோவியாவ் ஜனநாயகத்தினர் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.
டாக்டர் நவீன் ராம்கூலம், கடந்த 2005 முதல் 2014 ஆம் ஆண்டு வரை மொரிஷியஸ் நாட்டின் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது.