election-2019

அந்தக் கண்ணீர் இன்னும் நினைவிருக்கிறது

கோவை குண்டுவெடிப்பு நிகழ்ந்து மூன்றாம் நாள். இஸ்லாமியப் பெயர் இருந்தாலே கைது செய்வதற்குப் போதுமானதாக இருந்தது. கொத்துக்கொத்தாக இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டுசெல்லப்பட்டுக் கொண்டிருந்ததால் ஒவ்வொரு குடும்பத்திலும் கொடிய அச்சம் நிலவியது. தங்கள் வீட்டு இளைஞர்களும் சிக்கவைக்கப்படுவார்களோ என அஞ்சிய ஏராளமான குடும்ப இளைஞர்கள் வெளியூர்களுக்கு அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தனர். ஒரு சமூகமே தலைமறைவாக ஓடிக்கொண்டிருந்த இருண்ட சூழல் அது. 

அப்படித்தான் 14 வயதான ஜுபைர் அவனது சொந்த ஊரான கேரளாவுக்கு பஸ்ஸில் சென்றுகொண்டிருக்கும்போது நடுவழியில் மறித்துக் கைதுசெய்யப் பட்டான். அவனது உம்மாவும் ராதியும் பதறியடித்து ஸ்டேசனுக்கு ஓடினர். எந்தக்குற்றமும் செய்யாத ஜுபைரை விட்டுவிடும்படி கெஞ்சிக் கதறிய குரல் காவலர்களின் காதுகளில் விழவே இல்லை. 

இவர்களின் துயரத்தைப் பார்த்து மனமிறங்கிய ஒரு ‘நல்ல’ போலீஸ்காரர் இப்படிச்சொன்னார்: “ஒரு அம்பதாயிரம் ரெடி பன்னுங்க... மேலதிகாரிகிட்ட பேசி ஜுபைர ரிலீஸ் பன்னிர்லாம்..” குடும்ப வருமானத்தின் ஒரே வழி யான ஜுபைரைத் தொலைத்துவிட்டு சாப்பாட்டுக்கே வழியின்று நிற்கும் குடும்பம் ஐம்பதாயிரத்துக்கு எங்கே போகும்...? 

‘எண்ட ரப்பே... எண்ட மோன காப்பாத்து...’ தலையிலடித்துக்கொண்டு அழுதாள். 


எதையோ உணர்ந்தவள் போல ராதிக்கிழவி சட்டென அங்கிருந்து ஓடி னாள்.. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் பி.ஆர். நடராஜன் வீட்டு வாசலில் சென்று

நின்றாள். தோழர் பி.ஆர்.நடராஜன் தலைமை யில் தோழர்கள் ஸ்டேசனுக்கு விரைந்தனர். ஆதாரமின்றி கைதுசெய்யப்பட்டு பொய்வழக்கு போடும் காவல் துறையைக் கண்டித்து முற்றுகையிடுவோமென எச்சரித்தார் பி.ஆர்.நடராஜன். ஜுபைரோடு சேர்த்து மொத்தம் 13 இளைஞர்களை விடுவித்து கையோடு அழைத்து வந்தனர்... #மௌனத்தின்_சாட்சியங்களுக்காக பேட்டியெடுத்தபோது அந்தக்குடும்பங் கள் நன்றியோடு நினைவுகூர்ந்தபோது கசிந்த கண்ணீர் இன்னும் நினை விருக்கிறது..!!

- சம்சுதீன் ஹீரா

;