election-2019

img

பாமக மாநில துணை தலைவர் கட்சியில் இருந்து விலகல்

கோயம்புத்தூர், ஏப்.10– பாமக மாநில துணை தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக - பாமக கூட்டணி பேரக்கூட்டணி என அவர் விமர்சித்துள்ளார்.கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் பாமக மாநிலதுணை தலைவர் பொங்க லூர் இரா. மணிகண்டன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாமகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில், திராவிட அரசியலுக்கு மாற்று என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சொன்னதை நம்பி கட்சியில் இணைந்தேன். அன்புமணி ராமதாஸ், அதிமுக, பாஜகவோடு கூட்டணி அமைத்தது ஏமாற்றம் அளிக்கிறது. அதிமுக மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டயர் நக்கி என்பது போன்ற தடித்த வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து விட்டு கூட்டணி அமைத்தது அதிர்ச்சியளிக்கிறது. கூட்டணி அமைக்க பேரம் நடைபெற்றுள்ளது. 


அதிமுக - பாமக கூட்டணி பேரக்கூட்டணி. ஆரம்பத்தில் வேறுவழியில்லை என ஏற்றுக்கொண்டேன். ஆனால் களத்தில் தேர்தல் வேலை செய்யப்போகும்போது இக்கூட்டணியை மக்கள் காறிக் காறி துப்புகிறார்கள். இக்கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்பது கண்கூடாகத் தெரிகிறது.தொண்டர்களுடன் கலந்தலோசித்து கூட்டணி அமைத்ததாக சொல்வது முழுக்க முழுக்க பொய். பாமக ஒரு குடும்ப கட்சி. அதிமுக, திமுகவை விமர்சிக்க அன்புமணிக்கு தகுதியில்லை. ராமதாஸ் அரசியலுக்கு வந்த பின்னரே தமிழகத்தில் பேரம் என்பது உருவானது. வன்னியர்களால் ராமதாஸ் குடும்பம் பயன் பெறுவதை முற்றுப்புள்ளி வைக்கவே கட்சியில் இருந்து வெளியேறுகிறேன். அன்புமணி ராமதாஸ் நல்ல நிர்வாகி அல்ல எனவும், தொண்டர்களை மதிப்பவர் அல்ல. பூத்களை கைப்பற்றுவோம் என அன்புமணி ரவுடி போல பேசுகிறார். இவர்கள் நடவடிக்கையால் அரசியலை இளைஞர்கள் வெறுக்கிறார்கள். அதிமுக கூட்டணியை கட்சியினர் ஏற்றுக்கொண்டா லும், மக்கள் ஏற்று கொள்ளவில்லை. பெரிய தொகையை வாங்கி கொண்டு கூட்டணி அமைத்துள்ளது. மகன்வென் றால் போதுமென ராமதாஸ் நினைக்கிறார். எஸ்ஆர்எம் உரிமையாளர் பாரிவேந்தரை மிரட்டி பாமக தலைவர் பணம் பெற்றுள்ளார். பாமகவில் இணைந்ததை வரலாற்று பிழையாக கருதி வெளியேறுகிறேன்.இவ்வாறு பொங்கலூர் இரா.மணிகண்டன் தெரிவித்தார்.

;