election-2019

நீட்டுத் தேர்வை நொழைச்சவன்தான் தில்லாலங்கடி

நீட்டுத் தேர்வை நொழைச்சவன்தான்

தில்லாலங்கடியோ

தமிழகத்தை அழிச்சவன்தான்

தில்லாலங்கடியோ

மூட்டைத் தூக்கும் தொழிலாளி

தில்லாலங்கடியோ

மொத வாரிசு அனிதாவைத்

தில்லாலங்கடியோ

போட்டுத் தள்ளிய பாவி பிஜேபி

தில்லாலங்கடியோ

கூட்டுக் கொலையன் அதிமுக

தில்லாலங்கடியோ

வாசலிலே வாக்குச் சாவடி

தில்லாலங்கடியோ

யோசனையைப் பண்ணிப்பாரு

தில்லாலங்கடியோ

நேரம் வந்தது நெருப்பெடுங்கோ

தில்லாலங்கடியோ

யாரு எப்படி வகுப்பெடுங்கோ

தில்லாலங்கடியோ

புரிஞ்சிக்கிட்டு ஓட்டுப்போட்டா

தில்லாலங்கடியோ

பூமி இருட்டு வெளிச்சமாகும்

தில்லாலங்கடியோ


குப்பத்து மணி

;