election-2019

எழுத்தாளனை விட சிறந்த அரசியல்வாதி கிடையாது

தமுஎகசவில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். எந்த ஒரு அரசியல் கட்சியின் திட்டத்தையோ, கொள்கைகளையோ கொண்டு செல்லும் இயக்கம் அல்ல தமுஎகச. அதே நேரத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தனக்கு வழங்கிய இரண்டு இடங்களில் ஒன்றை தமுஎகசவிற்கு வழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். படைப்பாளர்கள், கலைஞர்கள் மிரட்டப்படுகிற, கொலை செய்யப்படுகிற இந்தக் காலத்தில் துணிச்சலுடன் திரைக் கலைஞர்கள், திரைத்துறை சார்ந்த ஆளுமைகள் என ஒரு பெரும்படையாக வந்திருக்கும் இந்த புது மலர்களை தமுஎகச சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தனது பிரச்சாரத்தில், “சு.வெங்கடேசன் ஒரு எழுத்தாளர். அவருக்கு என்ள அரசியல் தெரியும்” என்று கேட்டுள்ளார். இப்படிச் சொல்வதன் மூலம் பண்டித ஜகவர்லால் நேரு, அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட ஏராளமான அரசியல் ஆளுமைகளை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார். எழுத்தாளர்களாக இருந்துகொண்டுதான் இவர்கள் அரசியலில் சாதனை படைத்துள்ளனர். எழுத்தாளர் என்றால் கோர்ட்டில் எழுதும் ரைட்டர் என்று நினைத்துவிட்டார் போலும்.கலையையும், எழுத்தையும்விட சிறந்த அரசியல் இந்த உலகத்தில் எதுவும் கிடையாது. மனிதகுலம் எந்த திசைவழியில் செல்லவேண்டும்? இந்த உலகில் மனிதர்கள் அடைகிற துயரங்கள் என்ன? பின் விளைவுகள் என்ன? அதன் பின்னால் இருக்கும் தத்துவம் என்ன? அரசியல் என்ன? என்பதை தன் படைப்பிலும் எழுத்திலும் கொண்டு வருபவனைவிட பெரிய அரசியல்வாதி யாரும் கிடையாது.காவல் கோட்டம், ஆட்சித்தமிழ், வேள்பாரி உள்ளிட்ட படைப்புகள் மூலம் ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் வலிகளையும், ரணங்களையும் எழுத்தின் மூலம் கொண்டுவந்தவர் சு.வெங்கடேசன். எளிய மக்களின் குரலாக, நமக்காக பேசும் குரலாக மதுரை மண்ணிலிருந்து நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசனின் குரல் ஒலிக்கட்டும்ல.


ச.தமிழ்ச்செல்வன் தலைமை உரையில்…

;