election-2019

img

சேதுபாவாசத்திரம் பகுதிகளில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தீவிர வாக்குச் சேகரிப்பு

தஞ்சாவூர், ஏப்.5- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சி, மல்லிப்பட்டினம், கரிசவயல் ஆகிய பகுதிகளில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது அங்கு அவருக்கு தி.மு.க கட்சியினர், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.தி.மு.க.ஒன்றிய கழக செயலாளர்கள் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, இந்தியஜனநாயக கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.தி.மு.க வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசும்போது, கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜ கட்சியும், 7 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆளும் அதிமுககட்சியும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் என தமிழகத்தைப் பாலைவனமாக மாற்றி விட்டனர். கஜா புயல் பாதித்தபேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதி மக்களுக்கு இன்றுவரை நிவாரணம் முழுமையாகக் கிடைக்கவில்லை. மீனவர்களைப் பற்றி ஆளும் அரசுக்கு அக்கறையும் இல்லை.தற்போது நிவாரணம் கிடைக்காமல் உள்ளஅனைவருக்கும் முழுமையாக நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பிரச்சாரப் பயணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

;