election-2019

img

நாம் மதவாதிகள் அல்ல என்பதை உணர்த்தும் தேர்தல் இது

மதுரை, ஏப். 2-திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து திரைப்பட இயக்குநர்கரு. பழனியப்பன், மேற்கு சட்டமன்றதொகுதிக்குட்பட்ட சோலையழகுபுரத்தில்ஞாயிறன்று வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் கூறியதாவது:சு.வெங்கடேசன் எனது நண்பர். சிறந்தஎழுத்தாளர். கலைஞர்கள் அனைவரும் வெங்கடேசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அவரை வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதே நமதுகடமை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற தேசம். நாம் மதவாதிகள் அல்ல என்பதை உணர்த்த வேண்டும். வாக்காளர்கள் தீமையின் பக்கம் நிற்காமல் நன்மையின் பக்கம் நிற்க வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் மிக சிறந்த வேட்பாளர் சு. வெங்கடேசன் தான். எதிரிகள் தோற்பார்கள் என்றிருக்கக் கூடாது. அவர்கள் மிகவும் மோசமாக தோற்க வேண்டும் என்றார். தொடர்ந்து சினிமாகாரர்கள் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கிறார்களே என செய்தியாளர் கள் கேட்டதற்கு அவர்களுக்கு என கட்சி உள்ளது. எனக்கு இல்லை. எனவே சு. வெங்கடேசனை ஆதரிக்கிறேன் என்றார். மேலும் அதிமுகவினர் வாக்கு கேட்டு செல்லும் போது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனரே என செய்தியாளர் கேட்டதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கத்தான் செய்வார்கள். ஏனென்றால் அதிமுக, பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளதுதான் காரணம் என்றார்.புதுவை உட்பட தமிழகத்தின் நாற்பது இடங்களிலும் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

;