election-2019

தில்லு முல்லு தில்லு முல்லு

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் மிகமிகக் குறைந்திருக்கிறது. ஆட்சியாளர்கள் பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்து மாற்றியமைத்துள்ள தரவு வரிசைகளின் படியேகூட, 2013-14ஆம் ஆண்டில் 8.2 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம், தற்போது 2018-19இன் முதல் மூன்று காலாண்டுகளில் 7 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. முந்தைய தரவு வரிசைகளின்படி இது வெறும் 4.7 சதவீதமேயாகும்.கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 6.6 சதவீத மாக மேலும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இது எதனைக் காட்டுகிறது என்றால் நம் பொரு ளாதாரம் ஒரு மந்தநிலைக்குச் (சநஉநளளiடிn) சென்றுகொண்டிருக்கிறது என்பதேயாகும். இந்த லட்சணத்தில்தான் பிரதமர் மோடிஅவர்கள் உலகத்தில், இந்தியா ‘பொருளா தாரத்தில் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது‘ என்று பீற்றிக்கொண்டு வருகிறார். 


ஜிஎஸ்டி வரிகள் மூலமாக வசூலிக்கப் பட்டுவரும் தொகைகளும் கூட, 2017-18இல்7.8 சதவீதமாக இருந்ததிலிருந்து. தற்போது2018-19இல் 5.8 சதவீதமாக வீழ்ச்சி யடைந்திருக்கிறது. பொருளாதாரத்தில் மிகப் பெரிய அளவில் மந்த நிலைமை உருவாகி இருப்பதையே இது பிரதிபலிக்கிறது.பணமதிப்புநீக்க நடவடிக்கையும், ஜிஎஸ்டி நடவடிக்கையும் நாட்டின் பொருளாதார அடிப்படைகளை அடித்து வீழ்த்தக்கூடிய விதத்தில் அமைந்த இரட்டைத் தாக்குதல் களாகும். பணமதிப்பு நீக்கத்திற்கு முந்தைய உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 சதவீதமாக இருந்தது. அது பணமதிப்பு நீக்கத்திற்கு பின்பு 3.1 சதவீதமாக வளர்ந்தது. ஆனால், இந்தியாவிலோ இதற்கு முற்றிலும் முரணாக, பண மதிப்பிழப்புக்கு பிந்தைய காலத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதத்திலிருந்து, 6.8 சதவீத மாக வீழ்ந்திருக்கிறது.ஆட்சியாளர்களால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டதன் விளை வாகத்தான் உள்நாட்டுத் தேவையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக, உற்பத்தி (அயரேகயஉவரசiபே) மற்றும் தொழில் (iனேரளவசயைட) வளர்ச்சியும் முடங்கியப் போயின.இவற்றின் விளைவாக, நாட்டின் அதிகஅளவில் கார்களை உற்பத்தி செய்துவந்த மாருதி சுசுகி நிறுவனம் தங்களுடைய உற்பத்தி யில் 27 சதவீதத்தை வெட்டியிருப்பதாக அறிவித்திருக்கிறது. மக்களிடம் இதனை வாங்கு வதற்கான ‘கிராக்கி’ குறைந்திருப்பதையே அந்நிறுவனமும் சுட்டிக்காட்டி இருக்கிறது. எட்டு முக்கியமான உள்கட்டமைப்புத் தொழில்களிலும் வளர்ச்சி விகிதம், 2014 பிப்ரவரிக்கும் 2019 ஜனவரிக்கும் இடையே 2.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.


தொழில்துறை உற்பத்தி அட்டவணை (IIP-Index of Industrial Production) 2018

நவம்பரில் -0.3 சதவீத அளவிற்கு படுபாதாளத்தில் வீழ்ந்திருக்கிறது. இதற்கு முந்தைய ஏழு மாதங்களில் இதன் சராசரி வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக இருந்தது.

ரூபாய் மதிப்பின் தேய்மானமும், வரலாற்றில்மிகமிகத் தாழ்ந்த நிலையை எட்டியிருக்கிறது. 2014இல் அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 63.19 ரூபாயாக இருந்த நம் ரூபாயின் மதிப்பு, இப்போது 2019இல் 71.76 ரூபாயாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.


இந்தியாவின் ஏற்றுமதி வருவாயிலும் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக் கிறது. 2014 பிப்ரவரிக்கும் 2019 ஜனவரிக்கும் இடையே இந்தியாவின் வர்த்தகச் சமநிலை (வசயனந யெடயnஉந) மிக அதிக அளவில் 29.8 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதே போன்று, கடந்த ஐந்தாண்டுகளில், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (current account deficit) எனப்படும் இந்தியாவின் இறக்குமதிமதிப்புக்கும் ஏற்றுமதி மதிப்புக்கும் இடையே யான இடைவெளியும் அதிகரித்திருக்கிறது. இது, 2017-18இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 சதவீதமாக இருந்தது, 2018-19இல் 2.9 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.  டாலர்களில் கூறுவதென்றால், பற்றாக்குறை யின் வளர்ச்சி 6.1 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 19.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்திருக்கிறது.விவசாய வளர்ச்சி விகிதமும் இக்காலத்தில்மிகவும் குறைவான நிலைக்குச் சென்றிருக்கிறது. 2015 பிப்ரவரிக்கும் 2019 பிப்ரவரிக்கும் இடையே விவசாய வளர்ச்சி விகிதம் 5.1 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாக வீழ்ந்து, பின்னர் மேலும் 1.7 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த நான்கு காலாண்டுகளில் தொடர்ந்து எதிர்மறையிலேயே வளர்ச்சி விகிதம் இருந்திருக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு தேர்தல் அறிக்கையிலிருந்து...

;