election-2019

img

தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு- 4தொகுதிகளில் 19ந்தேதி வரை தேர்தல் பிரசாரத்துக்கு தடை

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறு தினம் நடைபெற உள்ளது. இந் நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளில் 19-ந்தேதி வரை பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

தமிழகம் உள்பட 97 மக்களவை தொகுதிகள், மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. அதன்பிறகு யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. 

இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் மக்களவை பொதுத் தேர்தல், சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.18-ம் தேதி காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு மட்டும் காலை 7 முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். இதை யடுத்து, 16-ம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டவிதிகள் அமலில் இருக்கும்.

இந்த நேரத்தில் தேர்தல் தொடர் பான எந்த ஒரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது. தேர்தல் விவகாரம் தொடர்பான எதையும் திரைப்படம், தொலைக்காட்சி, எப்எம் ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்றவை வாயிலாக பொதுமக்களின் பார் வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

மேலும், இசை நிகழ்ச்சி, திரை யரங்க செயல்பாடு, கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் பிரச்சாரம் செய்யக்கூடாது. இவற்றை மீறினால், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனை யாக விதிக்கப்படும். தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகி கள், கட்சிப் பணியாளர்கள், அத் தொகுதியின் வாக்காளர் அல்லாதோர் அனைவரும் 16-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

வாகன அனுமதிகள் செல்லாது

திருமண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந் தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கி யுள்ளார்களா என்பது கண்டறியப் படும். வேட்பாளர்களுக்கு வழங் கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் அனைத் தும் மாலை 6 மணி முதல் செல்லாததாகி விடும்.

வாக்குப்பதிவு நாளன்று வேட் பாளர் அவரது பயன்பாட்டுக்கு ஒரு வாகனம், தேர்தல் முகவர் பயன்பாட்டுக்கான ஒரு வாக னம், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கான அவரது பணி யாளர்கள் அல்லது கட்சிப்பணி யாளர்கள் பயன்பாட்டுக்கு ஒரு வாகனத்துக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து தனி அனுமதி பெற வேண்டும்.

வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதற்கும், திரும்ப அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுக் கவோ, வாங்கவோ, பயன்படுத் தவோ அனுமதியில்லை. இதை மீறி நடந்தால் தண்டிக்கப்படுவர். அரசியல் கட்சிகளின் தற்காலிக அலுவலகம் வாக்குச் சாவடி யில் இருந்து 200 மீட்டர் தொலை வில் அமைக்கப்படலாம். தேவை யில்லாத கூட்டத்தை அவர்கள் அங்கு அனுமதிக்கக் கூடாது.

மேலும், இன்று மாலை 6 மணி முதல் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரத்தையம் மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஏப்.11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட ஏற்கெனவே தடை விதிக் கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளிலும் நடைபெற உள்ளதால் தேர்தல் விதிப்படி இன்று மாலை 6 மணியுடன் இங்கு பிரசாரம் முடிகிறது.

எனவே இடைத்தேர்தலை காரணம் காட்டி இங்கு பிரசாரம் செய்ய முடியாது. 4 சட்டசபை தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியில் இருந்து வருகிற 19-ந்தேதி வரை பிரசாரம் செய்யக் கூடாது. அதன்பிறகு இந்த 4 தொகுதிகளிலும் தொடர்ந்து பிரசாரம் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


;