election-2019

img

ஆளும்கட்சிக்கு ஒரு அளவுகோல் எதிர்க்கட்சிக்கு ஒரு அளவுகோலா? காங்கிரஸ் தலைவர் அழகிரி கேள்வி

திருச்சிராப்பள்ளி, ஏப்.4-


திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வியாழனன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் பீமநகர் செடல்மாரியம்மன் கோவில் திடல் அருகேநடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, திருச்சி தொகுதிவேட்பாளர் சு.திருநாவுக்கரசர் உள் பட கூட்டணி கட்சியினர் பேசினர்.காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:இங்கு ஜனநாயகம் பலவீனமாகவும், பணநாயகம் பலமாகவும் இருக் கிறது. தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு.


கடந்த ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் பல தோல்விகளை சந்தித்துள்ளது. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் பாக வாகன சோதனை நடத்தி வியாபாரிகளிடம் பணம் பறிமுதல் செய் வார்கள். வங்கிகளுக்கு கொண்டு செய்யும் பணத்தை பறிமுதல் செய் வார்கள். பெண்கள் கொண்டு செல்லும் நகைகளை பறிமுதல் செய் வார்கள். ஆனால் தேர்தலுக்கு முந்தைய கடைசி 2 நாட்கள் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார்கள்.தமிழகத்தில் துரைமுருகன் வீட்டில் மட்டும் ஏன் சோதனை நடத்துகிறார்கள். அவர் வீட்டில் நடத்தியதைபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என அதிமுக அமைச்சர்கள் எல்லோருடைய வீடுகளிலும் சோதனை நடத்தலாம். அங்கெல்லாம் சோதனை நடத்தாமல் துரைமுருகன் வீட்டில் மட்டும் சோதனை நடத்தி அவர்களை தேர்தலில் தோல்வியடைய செய்ய அனைத்து வேலைகளும் செய்யப்படுகிறது. ஆளும்கட்சிக்கு ஒரு அளவுகோல், எதிர்கட்சிக்கு ஒரு அளவுகோல் என தேர்தல் ஆணையம் செயல்படக் கூடாது.


தேர்தல் ஆணையம் ஒரு சார்பானநிலை எடுத்தால் வருங்காலத்தில் அதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள். அதிகாரம் ஓரிடத்தில்மட்டும் இருக்காது. அது எல்லோருடைய கைகளுக்கும் வரும். அதனால் அதிகாரிகள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். காங்கிரஸ்கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுஇருக்கிறது. மாநில அரசுகள் விரும்பினால் நீட் தேர்வை வைத்துக் கொள்ளலாம் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இது தமிழக மாணவர் களுக்கு கிடைத்துள்ள அற்புத வாய்ப்பு என்றார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழுஉறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், சம்பத், ரெங்கராஜன், கே.சி.பாண்டியன், ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் ராமா மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;