election-2019

ஓட ஓட விரட்டுவார்கள் முதலமைச்சர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிரச்சாரம்

முதலமைச்சர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிரச்சாரம் செய்கின்றபொழுது அவர் மீது வந்து ஒரு செருப்பு விழுகின்றது. நல்ல வேளை அவர் மீது படவில்லை. அவர் அருகில் இருந்த வைத்தியலிங்கத்தின் மீது பட்டிருக்கின்றது. எறிந்தது யார்? பொதுமக்கள் அல்ல, அரசியல் ரீதியாக அல்ல அ.தி.மு.க-வைச் சேர்ந்த வேல்முருகன் என்ற ஒரு தோழர். அவர் முதலமைச்சர் மீது செருப்பை வீசி இருக்கின்றார், எனவே அ.தி.மு.க-வின் மீது அ.தி.மு.க-வைச் சார்ந்த தோழருக்கே இன்றைக்கு வெறுப்பு வந்து இருக்கின்றது என்றால், அதுதானே இன்றைக்கு மக்களிடத்திலும் இருக்கின்றது.தர்மபுரியில், முன்னாள் அமைச்சராக இருந்து மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் செம்மலை. அவர் அ.தி.மு.க தோழரை அடித்த காட்சிகள் அனைத்தையும் வாட்ஸ் அப்பில் பார்த்தோம்.


நான் ஏதோ தவறான செய்திகளை சொல்லவில்லை. ஆதாரத்தோடு தான் சொல்கிறேன். எதற்காக என்றால், தர்மபுரியில் புதுக் கட்சியோடு கூட்டணி சேர்ந்து இருக்கின்றார்களே, அந்தக் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அன்புமணிக்கு அவர் ஓட்டு கேட்கின்றார். அதன் பின்பு வேட்பாளர் அன்புமணி பேசுகின்ற போது, எதிரில் நின்று கொண்டிருக்கக் கூடிய அதிமுகவை சேர்ந்த தோழர் ஒருவர், 8 வழிச்சாலைக்காக போராட்டம் போராட்டம் என்று சொன்னீர்களே? இப்பொழுது எப்படி வந்து ஓட்டு கேட்கின்றீர்கள்? என்று ஒரு வார்த்தை கேட்டு இருக்கின்றார். நீங்கள் இதுவரையில் இந்தத் தொகுதியில் எம்.பியாக இருந்து இருக்கின்றீர்களே நீங்கள் என்ன செய்து கிழித்தீர்கள்? என்று ஒரு வார்த்தை கேட்டு இருக்கின்றார். இதை அன்புமணி கண்டும் காணாமல் பேசிக் கொண்டிருக்கின்றார். எந்த சொரணையும் இல்லாமல் அவர் பேசிக் கொண்டிருக்கின்றார். ஆனால், செம்மலைக்கு கொஞ்சம் ஆத்திரம் வந்து விட்டது. அதனால் அவர் அடித்த காட்சி வெளியில் வந்ததற்குப் பிறகு சேலம் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளரை போய் நேரடியாகச் சந்தித்து என்னை செம்மலை அடித்து விட்டார் என்றும், அவர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு புகார் கொடுத்து இருக்கின்றார். இன்றைக்கு இந்த நிலைதான் இருந்து கொண்டிருக்கின்றது.இந்த நிலை உங்கள் கட்சிக்குள் மட்டுமல்ல; நீங்கள் எங்கு சென்றாலும் மக்கள் உங்களை ஓட ஓட விரட்டுவார்கள். அதற்குத் தான் காத்திருக்கின்றார்கள், தயாராக இருக்கின்றார்கள் என்பதற்கு இதெல்லாம் அடையாளம்.


திருப்பூர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதில் இருந்து


;