election-2019

img

தொலைதூர தேச பக்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் - விஜயசங்கர் ராமச்சந்திரன்

கடந்த 40 ஆண்டுகளாகவே அரசியலையும் தேர்தல்களையும் கூர்ந்து கவனித்து வரும் அனுபவம் இருக்கிறது. இவ்வளவு மோசமான ஒரு தேர்தல் சூழலை இப்போதுதான் பார்க்கிறேன். ஒரு கட்சிக்கும் தலைவருக்கும் ஆதரவு நிலை எடுத்துப் பேசுவது இயல்பு. ஆனால் இப்போது மோடிக்கு எதிராக அரசியல் நிலைப்பாடு எடுப்பவர்களை எதிரிகளைப் போலவே வன்மத்துடன் சிலர் பார்க்கின்றனர். பலரின் நீண்ட கால நட்புகள் உடைந்திருக்கின்றன. குடும்பங்களுக்குள்ளும் ஒரு கசப்பான சூழல் நிலவுகிறது. முன்பெல்லாம் அரசியல் வேறுபாடுகளையும், கடுமையான விவாதங்களையும் மீறி நின்ற உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் குறிப்பாக திமுகவிற்கு எதிராக மிகக் கேவலமான பிரச்சாரங்களை அவிழ்த்து விட்டிருக்கிறனர். இவர்களின் பெரும்பாலோர் மெரிட்டோகிராட்டுகள். மே 2014 வரை கிரிக்கெட், சினிமா, சாப்பாடு என்று மட்டுமே இருந்து, அரசியல் ஒரு சாக்கடை என்று விலகிச் சென்றவர்கள்

வெளிநாடுகளில் வாழும் தொலைதூர தேசபக்தர்கள் பகுத்தறிவிற்கு விரோதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நாம் எவ்வளவுதான் உண்மை விவரங்களை எடுத்து வாதிட்டாலும் கேட்க மறுக்கிறார்கள். 

பிரதமர் மோடியே இந்து-முஸ்லிம் என்று பகிரங்கமாக பிரிவினைப் பிரச்சாரத்தில் இறங்கி விட்டார் (ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றாலும்).

தேர்தலில் பிஜேபி தோற்றால் கூட அவர்களின் ஆட்சி உண்டாக்கி வைத்திருக்கும் பொருளாதார, சமூக அழிவுகளைச் சரியாக்க மிக நீண்ட காலமாகும்.

;