election-2019

img

தமிழிசையின் பொய் பித்தலாட்டமும்

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள். பொய் எவ்வளவு பெரிசாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது’’ என்று பொய்க்கு புகழ்பெற்ற கோயாபல்ஸ் சொன்னான். இந்த கருத்தை யார் கடைபிடிக்கிறார்களோ இல்லையோ பாஜக தலைவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்கிறார்கள்.திமுக தனது தேர்தல் அறிக்கையில் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைந்தால் தமிழகத்தில் நிலுவையில் உள்ள அகல ரயில்பாதைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவோம்’’ என்று வாக்குறுதி அளித்தது.தமிழிசை இதனை கிண்டலடித்துள் ளார். தமிழகத்தில் அகலப்பாதை ரயில் திட்டங்களே பாக்கியில்லை என்றும் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாகவும் இது மு.க.ஸ்டாலினுக்கு தெரியாதா என்றும் கேள்வி கேட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது 5 அகலப்பாதை திட்டங்கள் நிலுவையில் உள்ளதாகவும் அவற்றுக்குத் தேவையான நிதி ரூ.4667 கோடி எனவும் 2014-15 முதல் 2019-20 வரை மொத்தம் செலவிடப்பட்டது ரூ.1411 கோடி எனவும் இன்னும் தேவை ரூ.3256 கோடி எனவும் நாடாளுமன்ற மக்களவையில் 26.12.2018 அன்று ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் பதிலளித்துள்ளார். இதனை தமிழிசை அறியாதவரா? 

;