election-2019

img

தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு நமோ உணவு வழங்கப்பட்டதால் சர்ச்சை

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு இன்று காலை நமோ உணவு வழங்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதையடுத்து இன்று காலை 9 மணியளவில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அந்த உணவுப்பொட்டலங்களின் மீது நமோ உணவு என்று அச்சிடப்பட்டிருந்தது. இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, அருகில் இருந்த நமோ புட்ஸ் என்ற கடையில் இருந்து உணவு வாங்கப்பட்டது. அரசியல் கட்சிகள் உணவு தரவில்லை என்ற காவல் துறை உயர் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். 


;