election-2019

img

பசு கோமியம் குடித்ததால்தான் என் மார்பக புற்றுநோய் சரியானது - சாத்வி பிரக்யா

பசு கோமியம் குடித்ததால்தான் என் மார்பக புற்றுநோய் சரியானது என்று மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியும் மக்களவைத்தேர்தல் பாஜக வேட்பாளருமான சாத்வி பிரக்யா அறிவியலுக்கு புறம்பாக பேசி உள்ளார். இது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மலேகான் குண்டு வெடிப்பில் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த சாத்வி பிரக்யாவை போபால் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இந்நிலையில் மாடுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சாத்வி பிரக்யா, "மாடுகள் பல இடங்களில் நடத்தப்படும் விதம் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. உண்மையில் மாடுகள் மற்றும் மாடு சார்ந்த தயாரிப்புகளால் பல நன்மைகள் உள்ளன. மாட்டின் சிறுநீரை அருந்தியதன் மூலம் மார்பக புற்றுநோய் குணமாகி உள்ளது. நான் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தேன். கோமியத்தை அருந்தியதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டேன். மேலும் ரத்த அழுத்தம் குறையவும் நல்ல தீர்வாக உள்ளது. விலங்குகளில் கழுத்தில் இருந்து பின்பக்கம் வரை தேய்க்கும் போது அது சஞ்சலத்துடன் உணர்கிறது. எனவே மாட்டின் பின்புறத்தில் இருந்து கழுத்துவரை தடவிக்கொடுக்கும் போது ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது என கூறியுள்ளார் என அறிவியலுக்கு புறம்பான சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே சாத்வி பிரக்யா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடித்த சம்பவத்தில் நானும் இருந்தேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். ராமரின் மண்ணில் இருந்து ஒரு கறை அகற்றப்பட்டுள்ளது. கடவுள் எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். அந்த இடத்தில் நிச்சயம் ராமர் கோயில் கட்டுவோம்" எனத் தெரிவித்திருந்தார். 

மேலும் மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஏடிஎஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே தனக்கு கொடுமை செய்ததால், அவரை சபித்தேன் என்று தொடர்ந்து என தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சர்ச்சை கருத்துகளை கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  


;