election-2019

img

பாஜகவினர் நுழைய தடை விதித்த கசேரா கிராமப் பொதுமக்கள்..

நொய்டா, ஏப். 6 -

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இங்கு, கடந்த மக்களவைத் தேர்தலில், பாஜக மட்டும் 71 தொகுதிகளில் வென்றது. ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை. பாஜக மீது மக்கள் வெறுப்படைந்து இருக்கிறார்கள். அதற்கான ஒற்றை உதாரணமாக சொல்ல வேண்டுமானால், நொய்டா அருகிலுள்ள கசேரா கிராமத்தைச் சொல்லலாம்.தங்கள் கிராமத்திற்குள் பாஜகவினர் நுழையக் கூடாது என்று ஊரின்எல்லையில் அறிவிப்புப் பலகைவைக்கும் அளவிற்கு இங்குள்ளமக்கள் பாஜக மீது வெறுப்படைந்திருக்கிறார்கள்.இவ்வளவுக்கும் இந்த கிராமம், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவால் தத்தெடுக்கப்பட்ட கிராமம். அவரது கவுதம் புத்தா நகர் தொகுதிக் குள்தான் இந்த கிராமமும் வருகிறது.ஆனால், கிராமத்தைத் தத்தெடுத்த மகேஷ் சர்மாவோ, பாஜக தலைவர்களோ ஒருவராலும் தங்களுக்கு நன்மை கிடைக்கவில்லை என்று கசேரா மக்கள் கூறுகின்றனர். இங்குள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று, கிராம மக்களின்நிலங்களை எல்லாம் கையகப்படுத்திவிட்டு, அதற்கான இழப்பீட்டை 13 ஆண்டுகளாக வழங்காமல் உள் ளது. அந்த இழப்பீட்டைக் கேட்டு கடந்த2018 அக்டோபரில் கசேரா மக்கள்மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். ஆத்திரமடைந்த தனியார் நிறுவனம், கிராம மக்களின் விளை நிலங்களில் இருந்த பயிர்களை எல்லாம் தீயிட்டு பழிவாங்கியுள்ளது. அனைத்தையும் இழந்த மக்கள்,காவல்நிலையத்திற்கு ஓடியுள்ளனர். ஆனால் ஒரு பயனும் இல்லை. தனியார் நிறுவனத்திற்கு சாதகமாகவே பாஜக தலைவர்கள் நடந்து கொண் டுள்ளனர்.அப்போது வைக்கப்பட்டதுதான், பாஜகவினர் கிராமத்திற்குள் நுழையஅனுமதி இல்லை என்று எழுதப்பட்டபலகையாகும். இன்றுவரை அதை கிராம மக்கள் அகற்றவில்லை. பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்கள் ஊருக்கு வரக்கூடாது என்பதற்காகவே, அறிவிப்புப் பலகையைஇன்னும் அகற்றாமல் வைத்துள் ளோம் என்றும் ஒருசேர கூறுகின்றனர் கசேரா கிராம மக்கள்.

;