election-2019

img

அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது - சத்யபிரதா சாஹூ

அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்

சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

வாக்குப்பதிவு நடந்த இடத்தில் பிரச்சனை இல்லை. பொதுப்பார்வையாளர்கள் அறிக்கை இன்று தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழகத்தில் 10 வாக்கு சாவடிகளில் மறுதேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கும். மாவட்ட தேர்தல் அதிகாரி கொடுக்கும் அறிக்கையை பொறுத்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கும்.

அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது . கடலூர் 1, திருவள்ளூர் 1, தருமபுரி 8 ஆகிய வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் குறித்து இன்று மாலை அறிக்கை வெளியாகலாம்.

தேர்தல் பறக்கும் படையால் தமிழகத்தில் இதுவரை ரூ.213.18 கோடி , 2403 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் விதிகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்

;