election-2019

img

மோடியின் சர்ச்சை பிரச்சாரம்: தேர்தல் ஆணையம் விழித்து கொள்ள வேண்டும்- நடிகர் சித்தார்த்

மோடியின் பாலகோட் தாக்குதல் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்துள்ளர். மேலும் தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லட்டூரில் பேசிய மோடி , ‘இந்த தேர்தலில் முதன்முறையாக ஓட்டுப் போடப் போகும் குடிமக்களுக்கு நான் ஒன்றை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உங்களின் முதல் ஓட்டு, பாலகோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டாமா? புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்காக உங்கள் ஓட்டு இருக்க வேண்டாமா' என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார். 

இதைத்தொடர்ந்து பாஜகவின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் நடிகர் சித்தார்த்,இப்படியெல்லாமா ஓட்டு கேட்பீர்கள் என கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தியாவிற்காக உயிர்நீத்த வீரர்கள், நமது விமானப் படையை வைத்து ஓட்டுக் கேட்கிறார் மோடி . ஏதோ, இந்திய படைகள் இவருக்கும், இவரது கட்சிக்கும் மட்டுமே பணி செய்வது போல பேசுகிறார். தேர்தல் ஆணையம் விழித்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு இதை விட தகுதி வாய்ந்தவர்கள் தேவை. ஜனநாயகம் என்பது மாற்றப்படுகிறது. என்ன ஒரு வெட்கக்கேடு” என கடுமையாக சாடியுள்ளார்.


;