நாகப்பட்டினம், ஏப்.6-
மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி சார்பில்நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜ், வெள்ளிக்கிழமை நாகை மாவட் டம், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிப் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பு மேற்கொண்டார்.கீழ்வேளூர் ஒன்றியத்தில் அத்திப்புலியூர், எரவாஞ் சேரி, குருமணங்குடி, குருக்கத்தி, கூத்தூர், அகரக்கடம்பனூர், கோகூர், வடகரை, ராதாமங்கலம் உள் ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டகிராமங்களுக்கு வீதி வீதியாகச் சென்று மக்களிடம் வாக்குக் கேட்டுப் பரப்புரையாற்றினார். எம்.செல்வராஜ் பரப்புரையாற்றும்போது குறிப்பிட்டதாவது, காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண் டலமாக அறிவிக்கப்படும், விவசாயத்தையும் நிலத்தடி நீரையும் பாழாக்கக் கூடியஹைட்ரோ கார்பன் திட்டம் வராமல் தடை செய்யப்படும். விவசாயிகளின் நலன் மேம்படுத்தப்படும்.விவசாயக் கடன், கல்விக்கடன், ஏழை மக்கள் சிறு நகைகளை அடகு வைத்துப் பெற்ற கடன் போன்றவை தள்ளுபடி செய்யப்படும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சுழல்நிதி வழங்கிமேம்படுத்தப்படும். கீழ்வேளூர் ஒன்றியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் என்றார். மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் இந்த வாக்குச்சேகரிப்புச் சுற்றுப் பயணத்தில் பங்கேற்றனர்.