செவ்வாய், ஜனவரி 19, 2021

election-2019

img

இவ வேற வறித்தெறிச்சல கிளப்புரா

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேச துவங்கினார். அருகில் இருந்த அதிமுக மகளிரணியில் ஒரு பெண், அமைச்சர் சீனிவாசன் பொறுப்பேற்ற பிறகு 4 ஆடும் 5 குட்டிகளும் கொடுத்தார். அதை வைத்து தான் நான் என் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன் என்று மற்ற பெண்கள் முன்பாக கூறினார். இதை நிஜம் என்று நம்பிய இன்னொரு அதிமுக பெண், அக்கா அவருகிட்ட சொல்லி எனக்கு 4 ஆடு வாங்கித் தந்திருக்கலாம்ல. நான் ரொம்ப கஷ்டப்படுறேன் என்று வெகுளியாக கேட்டார். இதை கேட்ட அந்த பெண் ஒரு முறை முறைத்துவிட்டு, எனக்கு ஆடு வாங்கித் தரவில்லை என்ற ஆத்திரத்தில

பேசிக்கிட்டு இருக்கேன். இவ வேற வயித்தெறிச்சல கிளப்புறா என்று கூற அருகில் இருந்த அதிமுக பெண்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். உடனே மேடையில் இருந்த ஒருவர் அங்க என்னம்மா சிரிப்பு வேண்டிக்கிடக்கு என்றார். உடனே அந்த பெண்கள் அமைதியாகிவிட்டார்கள். ஆனாலும் சில பெண்களுக்கு சிரிப்பு தாங்க முடியாமல் சிரித்தனர்.

;