கொங்குமண்டல விவசாயிகள் ஆதரவு
கரூர் முதல் கோவை வரையிலானஆறு வழிச்சாலை மற்றும் புறவழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய கொங்குமண்டல விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராமலிங்கம், ஒருங்கிணைப்பாளர் சதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் புதனன்று கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும், பி.ஆர்.நடராஜனிடம் தேர்தல் நிதியாக ரூபாய் ஒரு லட்சத்து ஓராயிரம் ரூபாய் நன்கொடையாக அளித்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின்கோவை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்த அவ்வமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், விவசாயிகளை பாதிக்கும் இந்த ஆறு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து ஆரம்பம் முதல் மார்க்சிஸ்ட் கட்சி எங்களுடன் இணைந்து போராடுவதால் பி.ஆர்.நடராஜனுக்கு எங்களது ஆதரவை தெரிவித்துள்ளோம். மேலும், மார்க்சிஸ்ட் கட்சிவெற்றி பெற்றால் மட்டுமே விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பதால் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றிபெற அனைத்து வகையிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது எனவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
செங்கொடி கட்சிக்கே எங்களது வாக்கு
நகரம் விழித்துக்கொள்ளும் முன்னே விழித்துக்கொண்டு நகரத்தை தூய்மைப்படுத்தும் தொழிலாளிகள் பணி நிரந்தரம், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கடுமையான பணிச்சூழலுக்கு மத்தியில்பணிபுரிந்து வருகின்றனர். இத்தகையதூய்மைப் பணியாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி வரும் செங்கொடி சங்கத்தின் தலைவர் தோழர் பி. ஆர்.நடராஜனுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குகோரி கோவை மாநகரில் தூய்மைப் பணியாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற தூய்மைப் பணியாளர்கள், எங்களது அடிப்படை உரிமைகளுக்காக போராடும் செங்கொடி கட்சிக்கே எங்களது வாக்கு என்று உரத்த குரல் எழுப்பினார்கள். முன்னதாக, இந்நிகழ்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோவை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் ரத்தினகுமார், அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மைய துணை ஒருங்கிணைப்பாளர் கே.கணேஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.