election-2019

img

கோவை: 100சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ரோபோ மூலம் விழிப்புணர்வு

கோவை,

கோவையில் 100சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ரோபோமூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 100சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல விளம்பரங்களை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பந்தையசாலையில் ரோபோ மூலம் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது இது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


;