வேலூரில் தனியாருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் 2வது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அதேநாளில் தமிழகத்தில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வேலூரில் பள்ளிக் குப்பம் என்ற பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் குடோனில் இருந்து கட்டக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விநியோக்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக பொருளார் துரை முருகன் வீடு மட்டும் அலுவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. துரை முருகன் மகன் கதிர் ஆனந்த் வருமான வரிச்சோதனை என்ற பெயரில் தேர்தல் பிரச்சார பணிகளை முடக்க முயற்சிக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். வருமான வரித்துறையின் இந்த செயல் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்று திமுக வழக்கறிஞர் வில்சன் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதைத்தொடர்ந்து இதை மனுவாக தாக்கல் செய்தால் நாளை நீதிமன்றம் விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்