election-2019

img

சு.வெங்கடேசன் மீது அவதூறு பரப்பிய பாஜக மாநிலச் செயலாளர் ஆர் சீனிவாசன் என்பவர் மீது வழக்கு பதிவு

மதுரை தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளராக வெங்கடேசன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே காவி கும்பலுக்கு அடிவயிறு கலங்கிப் போனது . அவர் மீது என்ன களங்கத்தை சுமத்தலாம் என்று திட்டமிட்டு சமூக ஊடகங்களில் அவர் சொல்லாததை சொன்னதாக அவதூறு பரப்பினார்கள்.

மதுரையின் மண்ணின் மைந்தன் சு . வெங்கடேசன் சித்திரை திருவிழா பற்றி தவறாக சொல்வாரா என்று பச்சை குழந்தைக்கு கூட தெரியும் . 600 ஆண்டுகால மதுரையின் வரலாற்றை எழுத்தில் வடித்து கொடுத்தவர் சு வெங்கடேசன்.

இதெல்லாம் தெரியாமல் காவி கும்பல் வழக்கம்போல் தங்களின் டகால்டி வேலைகளை காட்டினார்கள் . அதுகுறித்து போலீசிலும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தோம். இப்போது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில் சு . வெங்கடேசன் பற்றிய அவதூறுகளை கிளப்பிவிட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர் சீனிவாசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது .

இது தேர்தல் வழக்கு தானே என்று சாதாரணமாக நீங்கள் நினைக்கலாம் . ஆனால் மார்க்சிஸ்டுகள் எடுத்துக்கொண்ட வழக்குகளில் வெற்றி பெறாமல் விட்டதில்லை. 20 ஆண்டுகாலம் வாச்சாத்தி வழக்கை தொடர்ந்து நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க செய்தவர்கள் மார்க்சிஸ்டுகள். இந்த வழக்கும் அப்படித்தான் .ஆர் சீனிவாசன் களி திங்க போவது உறுதி...

-கருப்பு கருணா