“Air India-Engineering Service Limited”-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Aircraft Maintenance Engineer
காலியிடங்கள்: 125 (SC-18, ST-9, OBC-35, Others-51, EWS-12)
சம்பள விகிதம்: ரூ.95,000 - 1,28,000
வயது வரம்பு: 53 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 56 வயதிற்குள்ளிருக்க வேண்டும், SC/ ST பிரிவினர்களுக்கு 58 வயதிற்குள்ளும், EX-Serviceman பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகைகள் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: கணித பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DGCA சான்றிதழ் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள்: 26.8.2019 முதல் 30.8.2019 வரை நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Human Resources Department, Air India Jet Engine Overhaui Complex (Near Custom House), Indira Gandhi International Airport, New Delhi - 110037.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. (SC/ ST/ EX-SM பிரிவினர்களுக்கு ரூ.500). இதனை “Air India Engineering Service Limited” என்ற பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.airindia.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.