தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உள்ள 2144 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Post Graduate Assistants/ Physical Education Directors Grade - 1
காலியிடங்கள்: 2144
சம்பள விகிதம்: ரூ.36,900 - 1,16,600
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 57 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Post Graduate Assistant: காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் 50% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்று B.Ed. பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பில் ஒரே பாடத்தை படித்திருக்க வேண்டும்.Physical Education Directors: Physical Education பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் B.P.Ed. அல்லது M.P.Ed. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் Computer Based ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. (SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு ரூ.250).இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.7.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்