education

img

கடற்படையில் வேலை வாய்ப்பு - காலியிடங்கள்: 2700

இந்திய கடற்படையில் உள்ள 2700 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

1.பணியின் பெயர்: Sailor (Artificer Apprentice(AA))
காலியிடங்கள்: 500
கல்வித்தகுதி: Maths & Physics பாடப்பிரிவில் Chemistry/ Biology/ Computer Science-ஐ ஒரு பாடமாகக் கொண்டு 60% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 

2.பணியின் பெயர்: Sailor (Senior Secondary Recruits(SSR)) 
காலியிடங்கள்: 2200
 

கல்வித்தகுதி: Maths & Physics பாடப்பிரிவில் Chemistry/ Biology/ Computer Science-ஐ ஒரு பாடமாகக் கொண்டு 60% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட 2 பணிகளுக்குமான சம்பளவிகிதம் மற்றும் வயதுவரம்பு விபரம்:
சம்பளவிகிதம்: ரூ.21,700 - 69,100 

வயதுவரம்பு: 1.2.2000 தேதி முதல் 31.1.2003-க்கு இடைப்பட்ட தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
உடற்தகுதித் தேர்வு: உயரம் 157 செ.மீ. உயரத்திற்கேற்ற எடை பெற்றிருக்க வேண்டும்.

மார்பளவு: 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.தெளிவான பார்வைத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடற்திறன் தேர்வு: 7 நிமிடத்திற்குள் 1.6 கி.மீ தூரம் ஓடிக் கடக்க வேண்டும்.குறைந்தபட்ச நேரத்தில் Push-ups -10 மற்றும் Squat ups - 20 எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பயிற்சி ஆரம்பமாகும் நாள்: February 2020
இடம்: INS Chilka
விண்ணப்பக் கட்டணம்: ரூ.205. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 10.7.2019