education

img

மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

1. பணியின் பெயர்: உதவி பொறியாளர்

காலியிடங்கள்: 78

சம்பள விகிதம்: ரூ.37,700 முதல் ரூ.1,19,500

கல்வித்தகுதி: Civil/Chemical/Environmental Engg பாடப்பிரிவுகளில் BE/B.Tech படிப்பை முடித்து Environmental Science/Chemical/Petrochemical பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: சுற்றுச்சூழல் விஞ்ஞானி

காலியிடங்கள்: 70

சம்பள விகிதம்: ரூ.37,700 முதல் ரூ.1,19,500

கல்வித்தகுதி: Chemistry, Biology, Zoology, Environmental Chemistry, Environmental Science, Environmental Toxicology, Microbiology, Marine Biology, Bio-Chemistry, Analytical Chemistry, Applied Chemistry, Botany போன்ற பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 38

சம்பள விகிதம்: ரூ.19,500 முதல் ரூ.62,000

கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் கணினி தொடர்பாக குறைந்தது 6 மாத படிப்பை முடித்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: தட்டச்சர்

காலியிடங்கள்: 56

சம்பள விகிதம்: ரூ.19,500 முதல் ரூ.62,000

கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் தமிழக அரசால் வழங்கப்படும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், அருந்ததியர் போன்ற பிரிவினர்களுக்கு 5 வருடங்கள் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.தேர்வு நடைபெறும் தெதி பற்றிய விபரம் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. அருந்ததியர் மற்றும் விதவை பிரிவினர்களுக்கு ரூ.250. இந்த விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை ; தகுதியானவர்கள் www.tnpcb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.3.2020. மேலும், கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்க வேண்டும்.

;