பொதுத்துறை நிறுவனமான BECIL-ல் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1.பணியின் பெயர்: Skilled Manpower
காலியிடங்கள்: 400
சம்பளம்: ரூ.9381
வயதுவரம்பு: 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Electrical/ Wireman டிரேடில் ITI தேர்ச்சியுடன் NCVT/ SCVT சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்படிக்கத்தெரிந்திருக்க வேண்டும். எலக்ட்ரிக்கல்ஸ் துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Un-Skilled Manpower
காலியிடங்கள்: 700
சம்பளம்: ரூ.7613
வயதுவரம்பு: 55 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல்ஸ் துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹிந்தியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலத்தில் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. (SC/ ST/ PH பிரிவினர்களுக்கு ரூ.250). இதனை “Broad Cast Engineering Consultants India Limited” என்ற பெயரில் புதுடில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.ஆக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.becil.com என்ற இணையதள முகவரியில் கொடுக் கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அத்துடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Shri Awadhesh Pandit, Dy.General Manager(F & A), Broadcast Engineering Consultants India Limited, BECIL Bhawan, C-56/A-17,Sector - 62, Noida - 201307, Uttar Pradesh.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 24.6.2019