education

img

வாய்ப்பு வாசல் : கடற்படையில் அப்ரண்டிஸ் பயிற்சி

இந்திய கடற்படையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் பெயர்: Sailor Artificer Appretice (AA) FCB

காலியிடங்கள்: 500

வயதுவரம்பு: 1.8.2000 மற்றும் 31.7.2003 ஆகிய இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.21,700 - 69,100

கல்வித்தகுதி: +2-வில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை படித்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

உடற்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.1.6 கிலோ மீட்டர் தூரத்தை 7 நிமிடத்தில் ஓடி கடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் 20-Squatups, 10-Pushups எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.215. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 18.11.2019.

கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

;