education

img

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு... 

தில்லி 
நாட்டின் முதன்மையான போட்டித் தேர்வான யுபிஎஸ்சி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்த போட்டித் தேர்வின் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎப்எஸ் போன்ற உயர்நிலை பணிகளுக்கு காலிபணியிடம் நிரப்படுகிறது. 

நடப்பாண்டின் யுபிஎஸ்சி தேர்வுக்கான முதல்நிலை தேர்வு மே மாதம் 31-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வை நடத்த முடியாத சூழல் ஏற்பட, தேர்வை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அடுத்து எப்பொழுது முதல்நிலை தேர்வு நடைபெறும் என்பதை ஜூன் 5-ஆம் தேதி அறிவிக்கப்படும் என  தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில், வெள்ளியன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 

அதில் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலை நடைபெறும் எனவும், 2021-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி முதன்மை தேர்வு (5 நாட்கள்) நடைபெறும்  மத்திய அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் வனத்துறைக்கான ஐஎப்எஸ் முதன்மை தேர்வு பிப்ரவரி 8-ஆம் தேதிக்கும், என்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு அக்டோபர் 28-ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

என்ஜினியரிங் சர்வீஸ் தேர்வுக்கான விண்ணப்ப தேதியும் நீட்டிக்கப்பட்டள்ள நிலையில், ஜூன் 10-ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதி வரை அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

;