சென்னை,ஏப்.22- UPSC தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளது பாராட்டிற்குள்ளாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற UPSC நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
நான் முதல்வன் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்பவர் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் 23ஆவது இடமும், தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 134 பேர் பயிற்சி பெற்ற நிலையில் 50 பேர் சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி. தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கரபாண்டியன் ஆகிய 2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.