தமிழ்நாடு கால்நடைத்துறையில் உள்ள 1141 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Veterinary Assistant Surgeon
காலியிடங்கள்: 1141
சம்பள விகிதம்: ரூ.55,500 – 1,75,700
வயதுவரம்பு: பொது பிரிவினர்கள் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். இதர பிரிவினர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
கல்வித்தகுதி: B.V.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு அல்லது +2-ல் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: TNPSC-ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 23.2.2020.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 17.12.2019
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.