economics

img

குறுகிய கால கடன் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதம்தான்.... ரிசர்வ் வங்கி ஆளுநர்  அறிவிப்பு....

மும்பை:
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதம் என்பதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  மும்பையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பேசுகையில், வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவீதமாக தொடரும். இதனால்  வீடு,வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றம் ஏதும் இருக்காது . ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாகவே தொடரும்.  2021- 2022 ஆம் நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என்று கூறினார்.

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 26.2 சதவீதமாகவும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 8.3 சதவீதமாகவும், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 5.4 சதவீதமாகவும், ஜனவரி - மார்ச் காலாண்டில் 6.2 சதவீதமாகவும் வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தைகளில் போதுமான பணப்புழக்கம் நிலவும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும்.  கொரோனா அதிகரிப்பால் மாநில  அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளால் உள்நாட்டு வளர்ச்சியில் மாற்றமிருக்கும் என்றும் தெரிவித்தார்.

;