economics

img

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 83 ரூபாயாக சரிந்தது.

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. ஏற்கனவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 82 ஆக சரிந்த போதே வரலாறு காணாத வீழ்ச்சியாக பார்க்கப்பட்டது. தற்போது மேலும் சரிந்து வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது.

இன்று டாலர் மதிப்பு கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் முதன்முறையாக 83-ஆக சரிந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதாக  பார்க்கவில்லை. டாலரின் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன் என்று நகைப்புக்குரிய வகையில் பேசியிருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது.

நடப்பு ஆண்டில் மட்டும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10% சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.