economics

img

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7 சதவிகிதமாக உயர்வு

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து எட்டு மாதங்களாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்த ஏற்றுக்கொள்ளக் கூடிய வரம்பான 6 சதவிகிதத்தை விட அதிகமாக உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 6.71 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் சில்லறை பணவீக்கம் 7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகச் சில்லறை பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது.

கிராமப்புறங்களில் கடந்த ஜூலை மாதத்தில் 6.8 சதவிகிதமாக இருந்த நுகர்வோர் பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 7.15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், நகர்ப்புறங்களில், கடந்த ஜூலை மாதத்தில் 6.49 சதவிகிதமாக இருந்த நுகர்வோர் பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில்  6.72 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;