economics

img

நாட்டின் அமைப்புசாரா தொழிற்துறையை மோடி அரசு சீரழித்து விட்டது.... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாடல்....

திருவனந்தபுரம்:
“மோடி அரசின் முன்யோசனையற்ற பணமதிப்பு நீக்க நடவடிக்கையே, நாட்டில் வேலையின்மை அதிகரிப்புக்கு காரணம்” என்று பொருளாதார அறிஞரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்ட பணமதிப்பு நீக்க முடிவால், அமைப்புச்சாரா துறையே சீர் குலைந்ததுடன், நாட்டில் வேலையின்மையும் அதிகரித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.திருவனந்தபுரத்தில் உள்ள “ராஜீவ்காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்” சார்பில், “பிரதீக்ஸா 2030” என்ற தலைப்பில் பொருளாதாரக் கருத்தரங்கு நடந்தது. காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி உள் ளிட்டோர் காணொலி வாயிலாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் டாக்டர் மன்மோகன் சிங் பங்கேற்று பேசியிருப்பதாவது:பொருளாதாரத்தை சீரமைக்க மத்திய அரசு தற்காலிகமான நடவடிக்கைகளைத்தான் எடுத்துள்ளது.சிறு, மற்றும் நடுத்தரத் தொழிற்துறைகளுக்கு போதிய கடன் கிடைக்காததால், அந்தத் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமைப்பு சாரா துறையில் வேலையின்மை மிகவும் உயர்ந்த அளவில் அதிகரித்து அந்த துறையையே சீரழித்து விட்டது.இதற்கு காரணம், கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு எடுத்த மோசமான பணமதிப்பு நீக்க நடவடிக்கைதான்.
கேரளம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் நிதிப்பற்றாக்குறை காரணமாக அதிகமாகக் கடன் பெற வேண்டியசூழல் ஏற்பட்டதால், அவற்றின் நிதிநிலைமைகள் மோசமடைந்து விட்டன. எதிர்கால பட்ஜெட்டுக்கு தேவையான நிதியை ஒதுக்க முடியாமல் பெரிய கடன் சுமையில் இருக்கின் றன. கடந்த 2 ஆண்டுகளாக உலகளவில் பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலை நிலவுகிறது. இதில் கேரள மாநிலமும் பாதிக்கப் பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அரசியல் கொள்கை மற்றும் இந்தியப் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு அடிப்படையாக இருப்பது கூட்டாட்சியும், மாநில அரசுகள் உடனான தொடர் ஆலோசனையும்தான். ஆனால், தற்போதுமத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசில் இந்த அம் சங்களை நான் காணவில்லை.கேரளாவில் சமூக வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. ஏராளமான தடைகள் மாநிலத்துக்கு இருந்தது. எனினும், அந்த தடைகளை கேரள மாநிலம் வெற்றிகரமாக கடந்துள்ளது. இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

;