economics

img

ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக நீடிக்கும் - ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார். அதன்படி, வங்கிகளில் குறுகிய கால கடனுக்கு விதிக்கப்படும் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக நீடிக்கும் என்று தெரிவித்தார். மேலும், நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 4.5% ஆக இருக்கும்; ஜிடிபி 7.2% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.