புதுதில்லி:
உலக அளவில் நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதற்கான பயணத்தில் இந்தியா கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.இதுதொடர்பான தரவரிசைப் பட்டியலில் (Sustainable Development Goals List - SDG) இந்தியா 117-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
‘நிலையான வளர்ச்சி - 2030’ என்றசெயல் திட்டம், ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளால் கடந்த2015-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப் பட்டது. இதில் குறுகிய காலத்திற்கான(2030) நிலையான வளர்ச்சி இலக்குகளாக 17 இலக்குகளை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டு அதனை நோக்கிமுன்னேறுவதென முடிவு செய்தன.பசி-வறுமை ஒழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, தரமான கல்வி,பாலின சமத்துவம், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம், மலிவான மற்றும் தூய எரிசக்தி, முறைப்படுத்தப்பட்ட வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி, தொழில், புத்தாக்கம் மற்றும்உள்கட்டமைப்பு உள்ளிட்டவையே அந்த இலக்குகள் ஆகும்.இதன் அடிப்படையிலான தரவரிசையில், கடந்த ஆண்டு, ஐ.நா.வில் மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் இந்தியா 115-ஆவது இடத்தில் இருந்தது.
ஆனால் இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியா தற்போது 2 இடங்கள் சரிந்து 117-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நிலையான வளர்ச்சி இலக்குமதிப்பீட்டில் 100-க்கு 61.9 மதிப்பெண் களையே இந்தியா பெற்றுள்ளது.இது, பூடான், நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய ஏனைய தெற்காசிய நாடுகளை விடவும் பின்தங்கிய நிலையாகும்.பசி ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு,பாலின சமத்துவம், நெகிழ்திறன் மிக்க உள்கட்டமைப்பு ஆகியவற்றிலும், நிலையான தொழில் மயமாக்கலை ஏற்படுத்துவதிலும் இந்தியா பின் தங்கியதே இந்த தரவரிசை சரிவுக்கு காரணம் என்று அறிக்கையில் கூறப் பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்த நிலையான வளர்ச்சிக் குறியீட்டில் 117-ஆவதுஇடத்தில் இருக்கும் அதேநேரத்தில், சுற்றுச்சூழல் ஆரோக்கியம், காலநிலை, காற்று மாசுபாடு, சுகாதாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும் சுற்றுச்சூழல் செயல்திறன் பட்டியலில் (Environmental Performance Index - EPI) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 180 நாடுகளில் இந்தியா 168-வது இடத்தையும், சுற்றுச்சூழல் சுகாதாரப் பிரிவில் 172-வதுஇடத்தையுமே இந்தியா பிடித்துள் ளது.இந்தியாவில் நிலையான வளர்ச்சிஇலக்குகளை எட்டியதில் கேரளா,இமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும், சண்டிகர் யூனியன் பிரதேசம் முன்னணியில் இருக்கின்றன;ஜார்க்கண்ட், பீகார் போன்ற மாநிலங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன என்றும் எஸ்டிஜி அறிக்கை மதிப் பிட்டுள்ளது.