புதுதில்லி:
2021 மார்ச் மாத இறுதிக்குள், இந்தியாவின் மொத்தக் கடன் சுமார் ரூ. 160 லட்சம் கோடியாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.இந்த 160 லட்சம் கோடி ரூபாயானது, மொத்தஉள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் சுமார் 90 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கடன் ரூ. 147 லட்சம் கோடியாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 203 லட்சம் கோடியாகவும் இருந்தது. மொத்த உள்நாட்டுஉற்பத்தியில், நாட்டின் மொத்தக் கடன் 72 சதவிகிதமாக இருந்தது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.12 லட்சம் கோடி கடன் வாங்கப் போவதாகஅறிவித்துள்ளார். மறுபுறத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மதிப்பில், நாட்டின் கடன் விகிதம் 90 சதவிகிதத்திற்கு மேல்இருக்கும் என்று சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.