economics

img

சமையல் சிலிண்டர் விலை இனி வாரந்தோறும் உயரும்.. 2021 ஜனவரி முதல் புதிய நடைமுறையை அமல்படுத்தும் எண்ணெய் நிறுவனங்கள்...?

புதுதில்லி:
சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG Cylinder) விலை, இனிமேல் ஒவ்வொரு வாரமும் மாற்றியமைப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய நடைமுறை 2021 ஜனவரிமுதல் அமலுக்கு வரும் என்றும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.பெட்ரோலியப் பொருட்களின் விலைஉயர்வைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், மத்திய அரசிடம்தான் முன்பு இருந்தது. அப்போது, ஆண்டுக்கு ஓரிரு முறை - அதுவும் பைசா அளவிலேயே பெட்ரோல்- டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வுஇருக்கும்.ஆனால், மத்தியில் நரேந்திர மோடிதலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்குவந்தபின், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப,எண்ணெய் நிறுவனங்களே, பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கூறி, தனது பொறுப்பிலிருந்துகைகழுவிக் கொண்டது.

விலை உயர்வு அதிகாரத்தை எண் ணெய் நிறுவனங்களிடம் விடுவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகூடும்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படும். மற்றபடி, சந்தையில் விலை குறைந்தால், உள்நாட்டிலும், பெட்ரோல் - டீசல் விலை குறையும் என்று சமாளித்தது.ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் குறைவதில்லை.எவ்வளவு விலை குறைகிறதோ, அதே அளவிற்கு மோடி அரசு தொடர்ந்து வரிகளைஉயர்த்தி வருகிறது.

கொரோனா தொற்று பொதுமுடக்கக் காலமான பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர்என்ற நிலைக்கும் கீழே சரிந்தது. ஆனால்,இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலைகுறைக்கப்படவில்லை. மாறாக, பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 17 ரூபாயும் டீசலுக்கு ரூ. 16 ரூபாயும் கலால் வரி (Excisetax) உயர்த்தப்பட்டது. இதனால், இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் அதன் உண்மையான விலையைக் காட்டிலும் 255 சதவிகிதம் கூடுதல்விலைக்கும், டீசல் அதன் உண்மையான விலையைக் காட்டிலும் 248 சதவிகிதம் கூடுதல் விலைக்கும்தான் தற்போது வரை விற்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்தான், பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலையைதினமும் மாற்றியமைப்பது போல, சமையல் சிலிண்டர் விலையை வாரந்தோறும்மாற்றியமைக்கும் முடிவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது.இதுவரை சிலிண்டர் விலை மாதமொரு முறைதான் மாற்றியமைக்கப்பட்டு வந்தது. டிசம்பரில் மட்டும்தான் டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 15 என இரண்டுமுறை உயர்த்தப்பட்டது.டிசம்பர் 1 அன்று, சிலிண்டர் விலைதில்லியில் 594 ரூபாயாகவும், சென்னையில் ரூ.610 ஆகவும் இருந்த நிலையில்,டிசம்பர் 16 அன்று 15 நாட்களுக்கு உள் ளேயே தில்லியில் 694 ரூபாயாகவும், சென்னையில் 710 ரூபாயாகவும் மொத் தம் 100 ரூபாய் சிலிண்டர் விலை அதிகரித்தது.

தற்போது, இந்த நடைமுறையையே 2021 ஜனவரி முதல் மேற்கொள்வது என்றும், ஒவ்வொரு வாரமும் விலையை மாற்றியமைப்பது என்றும் எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.பெட்ரோல், டீசல் வர்த்தகத்தைப் பொறுத்தவரை, சர்வதேச சந்தையில் நிகழும் கச்சா எண்ணெய் விலையேற்றத் திற்கு ஏற்ப அன்றாடம் விலையை உயர்த்திக்கொள்ள முடிகிறது. இழப்பையும் சரிக்கட்டிக் கொள்ள முடிகிறது. ஆனால், எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்துவதற்கு ஒருமாதம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதற்குள் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியதாகிறது. எனவே, வாரம் ஒருமுறை எரிவாயு சிலிண்டர் விலைகளை மாற்றியமைத்தால் மட்டுமே தங்களுக்கு லாபம் என்று எண்ணெய் நிறுவனங்கள் கருதுவதாக கூறப்படுகிறது.வாரந்தோறும் சிலிண்டர் விலை உயர்வு என்ற இந்த புதிய முடிவானது, பொதுமக்கள் மீது மோடி அரசு தொடுக் கும் புத்தாண்டு தாக்குதலாக இருக்கப் போகிறது.

;